கத்திப்பாராவில் ட்ரோன் பயன்படுத்தி ரீல்ஸ் எடுத்ததாக முதல்வர் மீது அதிமுக ஐடி விங் குற்றச்சாட்டு
சென்னை, 30 ஜூலை (ஹி.ச.) சென்னை கத்திப்பாரா பகுதியில் ட்ரோன் பயன்படுத்தி ரீல்ஸ் படம் எடுத்ததாக முதலமைச்சர் விஜயை குற்றம்சாட்டி, அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும், விமானப் போக்குவரத்து ஒ
ADMK Head Quaters


Vv


சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)

சென்னை கத்திப்பாரா பகுதியில் ட்ரோன் பயன்படுத்தி ரீல்ஸ் படம் எடுத்ததாக முதலமைச்சர் விஜயை குற்றம்சாட்டி, அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அந்தப் பதிவில்,

நேற்று கத்திப்பாரா மேம்பாலம் அருகே சுமார் 101 அடி உயரத்தில் ட்ரோன் மூலம் காட்சிகள் பதிவு செய்து ரீல்ஸ் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள கத்திப்பாரா பகுதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாகும் என்றும், அங்கு எந்தவித ட்ரோன் இயக்கத்திற்கும் அனுமதி இல்லை என்றும் அதிமுக ஐடி விங் கூறியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதற்காக No Fly Zone விதிகளை மீறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அந்தப் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும், இந்திய விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் உடனடியாக தலையிட்டு வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ