Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 30 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி திருக்கதவுகள் ஆயிரக்கணக்கான கிலோ மல்லிகைப்பூ மற்றும் வண்ணமயமான வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது.
ஆடி பௌர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஒருமுறை மட்டுமே நடைபெறும் சிறப்பு விழாவின் ஒரு பகுதியாக, நேற்று பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியின் திருக்கதவுகள் திறக்கப்பட்டு படிபூஜை மற்றும் சந்தனக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று, சன்னதியின் திருக்கதவுகள் ஆயிரக்கணக்கான கிலோ மல்லிகைப்பூ மற்றும் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பதினெட்டாம்படி கருப்பணசாமியை தரிசித்து வழிபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam