CJP மீண்டும் போராட்ட எச்சரிக்கை - ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி, 30 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகளை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் (FIR) உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் CJP அமைப்பு, அவ்வாறு நடவடிக
Jantar mantar


புதுடெல்லி, 30 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகளை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் (FIR) உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் CJP அமைப்பு, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஒன்றிய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

டெல்லி போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க பல அடுக்குகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவை ஒன்றோடொன்று வெல்டிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய நுழைவுப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஜந்தர் மந்தர் பகுதியில் குழுவாக நடந்து செல்பவர்களை கூட போலீசார் விசாரணை செய்த பின்பே அனுப்பி வைக்கின்றனர்.

இதுபோல போராட்டம் நடத்தும் இடத்தில் குவியும் இளைஞர்களை கண்காணித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P