Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஜூலை (ஹி.ச.)
கோவை உக்கடம் பகுதியில், சட்டவிரோத நிதி பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட அசாரூதீன் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபெரோஸ், நவாஸ், புக் சதாம், அப்பாஸ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
வீடுகளில் உள்ள ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், வங்கி பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத நிதி பரிவர்த்தனை, சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் மற்றும் அவற்றின் பின்னணி தொடர்பாக ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் கோவை உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
Hindusthan Samachar / VINOTH KUMAR P