Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல் , 30 ஜூலை (ஹி.ச)
திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக வெடிகள் வெடிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக வெடி வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்திற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் எனவும், முறையான அனுமதி இன்றி மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் வெடிகள் வெடிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இந்த விபத்திற்கு காரணமான திருவிழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b