இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்வு
சென்னை, 30 ஜூலை (ஹி.ச.) ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,155க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.
தங்கம்


சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)

ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,155க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P