கடையநல்லூர் பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் - ஆயிரக்கணக்கான மாத்திரைகள் சாலையில் கொட்டப்பட்டுள்ள அவலம்
தென்காசி, 30 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஓரமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடையநல்லூர் பகுதியில் உள்ள
Medi wastage


தென்காசி, 30 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஓரமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கடையநல்லூர் பகுதியில் உள்ள சாலப்பேரி என்கின்ற குளத்தின் கரையில் தற்போது இந்த கழிவுகளானது கொட்டப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ஏராளமான மாத்திரைகள் அந்த குளத்தின் கரையில் கொட்டப்பட்டுள்ள நிலையில், அந்த மாத்திரைகள் காலாவதியான மாத்திரைகளா? அல்லது போதை மாத்திரைகளா? என்பது தொடர்பாகவும் தற்போது அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முறையான விதிமுறைகள் இருந்தும் இது போன்ற பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும், விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்தக்கூடிய குளத்திலும் யார் போட்டு சென்றார்கள்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN