Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 30 ஜூலை (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சார்ந்தவர் துரைராஜ். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரரான திருமூர்த்தி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாண்டு மோசடி மற்றும் இடம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வீட்டின் சுற்றுச்சுவரை திருப்பதி என்பவர் எனது இடத்தில் உள்ளது என இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது.
அதைக் கேட்கச் சென்ற துரைராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் கட்டையால் தாக்கியதில் துரைராஜ் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து, துரைராஜ் மற்றும் அவரது மனைவியை தாக்கிய திருமூர்த்தி ஜெயபால் தேவகி கலைவாணி ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN