Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 ஜூலை (ஹி.ச.)
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் இதுபோன்ற முறைகேடுகளும், நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் ₹5 லட்சத்திற்கு வினாத்தாள் பேரம் பேசப்பட்டதாகவும், தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே 132 கேள்விகள் புகைப்படம் எடுத்து கசியவிடப்பட்டதாகவும், ₹30,000-க்கு PhonePe மூலம் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டு கேரளா முதல் ராஜஸ்தான் வரை வாட்ஸ்அப் மூலம் பரவியதாக சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதிலளிக்க வேண்டும்.
வினாத்தாள் கசிவை மறைப்பதற்காக அவசரமாக நிறைவேற்றப்பட்ட 'ஹேக்-ப்ரூஃப்/ஆண்டி-பேப்பர் லீக்' சட்டம், சிறப்பு நீதிமன்றங்கள், 10 ஆண்டுகள் சிறை மற்றும் ₹10 கோடி அபராதம் உள்ளிட்ட அறிவிப்புகள் அனைத்தும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. வினாத்தாள் கசிவைத் தடுக்க இந்த சட்டங்களால் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காக்கக் கூடாது என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P