Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 30 ஜூலை (ஹி.ச.)
கேரளாவில் உள்ள கே. கருணாகரன் நினைவு அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல் 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் மாணவர் சேர்க்கையைத் தொடங்க மத்திய அரசு கொள்கை ரீதியான
(In-principle) ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த சுமார் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தக் கோரிக்கைக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த முடிவை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் அறிவித்தார். டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை மாநில அரசின் பிரதிநிதிகள் குழுவுடன் சந்தித்த மறுநாளே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தின் இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரியாக உருவாக்கப்படும் இந்த நிறுவனம், அடுத்த கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு 100 எம்பிபிஎஸ் மாணவர்களை சேர்க்கும் வகையில் அனுமதி பெற உள்ளது.
இருப்பினும், மாணவர் சேர்க்கை தொடங்க தேசிய மருத்துவ ஆணையம் (NMC) நிர்ணயித்துள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
Hindusthan Samachar / GOKILA arumugam