Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 30 ஜூலை (ஹி.ச.)
1983 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டப் பேருந்துகள் பிரிக்கப்பட்டு 'நேசமணி போக்குவரத்துக் கழகம்' உருவானதால், கட்டபொம்மன் கழகத்தின் தலைமையகம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் மாவட்டப் பெயர்களின் கீழ் கொண்டுவரப்பட்ட போது, இது மதுரை கோட்டத்தின் கீழ் திருநெல்வேலி மண்டலமாக மாற்றப்பட்டது.
2010 நவம்பர் 1 முதல் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு, திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு தனித்த அரசுப் போக்குவரத்துக் கழகமாக (TNSTC - Tirunelveli) பிரகடனப்படுத்தப்பட்டது.
நெல்லை கோட்டத்தின் தலைமையகம் திருநெல்வேலியில் அமைந்திருந்தாலும், நிர்வாக வசதிக்காக இது 3 முக்கிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
அவை திருநெல்வேலி மண்டலம் (திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள்) தூத்துக்குடி மண்டலம் (தூத்துக்குடி மாவட்டம் - 2013-இல் உருவாக்கப்பட்டது), நாகர்கோவில் மண்டலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ஆகும்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் திருநெல்வேலி மண்டலத்தின் புதிய பொது மேலாளராக த. மோகன் குமார் இன்று
(ஜூலை 30) பொறுப்பேற்றுக் கொண்டார்.
நெல்லை மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய பொது மேலாளராகப் பொறுப்பேற்ற மோகன் குமாருக்குத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b