இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் - முத்துலட்சுமி ரெட்டி!!
தமிழ்நாடு, 30 ஜூலை (ஹி.ச.) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886 - ஜூலை 22, 1968 இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் (Legislator), சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் பெண் மருத்துவர், மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி ஆவார். ப
G


தமிழ்நாடு, 30 ஜூலை (ஹி.ச.)

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886 - ஜூலை 22, 1968 இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் (Legislator), சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் பெண் மருத்துவர், மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

பெண்கள் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, மற்றும் பொது மருத்துவத்திற்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின்... பல துறைகளில் பங்களிப்பு செய்தவர்.

முதல் பெண் எம்.எல்.சி: 1926 ஆம் ஆண்டு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்றத் துணைத் தலைவர்: உலகின் ஒரு சட்டமன்றத்தின் முதல் பெண் துணைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம்:

இவரது தீவிர முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பத்ம பூஷண்: இவரது பொதுச் சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது

குழந்தை திருமணத் தடை:

பால்ய விவாகத் தடைச் சட்டம் (சாரதா சட்டம்) வரக் காரணமாக இருந்தார்.

அவ்வை இல்லம்:

ஆதரவற்ற பெண்களுக்காக 1930 இல் சென்னை சாந்தோம் பகுதியில் தற்போது அடையாறு 'அவ்வை இல்லம்' தொடங்கினார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை:

தனது சகோதரி புற்றுநோயால் இறந்ததால், 1954 இல் புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் நிறுவனத்தைத் (Cancer Institute) தொடங்கினார்

அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.

இவர் இந்திய மாதர் சங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

மேலும் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார்.

இவர் மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

தற்போது உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.

இவர் பத்ம பூஷண் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

எதையும் தடைகற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J