நாமக்கலில் ₹1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - தக்காளி கூடைகளுக்குள் மறைத்து கடத்தல்
நாமக்கல், 30 ஜூலை (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், தக்காளி கூடைகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ₹1 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்ற பிக்கப்
கஞ்சா


நாமக்கல், 30 ஜூலை (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், தக்காளி கூடைகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ₹1 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்ற பிக்கப் வேன் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிபாளையம் போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது தக்காளி கூடைகளின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 97 கிலோ உயர் ரக கஞ்சா மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, வாகன ஓட்டுநர் முரளி கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சாவுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பிக்கப் வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியும் வகையில் முரளியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam