Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 30 ஜூலை (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவர் அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட
34-க்கும் மேற்பட்ட கொடூர வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி ஊர்க்காவலனை காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்துச் சென்றனர்.
அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்து தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் இன்று அதிகாலை ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், ஊர்க்காவலனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாத்தூர் காவல்துறையினர், ஊர்க்காவலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது கும்பல் மோதலா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b