Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 30 ஜூலை (ஹி.ச.)
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்தது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார் மற்றும் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி தரப்பில் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam