குற்றாலத்தை தொடர்ந்து பாலருவி நீர்வீழ்ச்சியிலும் குளிக்க தடை
தென்காசி, 30 ஜூலை (ஹி.ச.) தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பாலருவி நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில்
Palaruvi Water Falls


தென்காசி, 30 ஜூலை (ஹி.ச.)

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பாலருவி நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையால் தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் உள்ள கேரளா மாநிலம் ஆரியங்காவு பாலருவி நீர்வீழ்ச்சி நோக்கி படையெடுத்து வந்தனர்.

இந்த நிலையில், பாலருவி நீர்வீழ்ச்சியிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க கேரளா வனத்துறையினர் தடை வித்துள்ளனர்.

மேலும், மழையின் அளவு குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த உடன் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN