பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்
சென்னை, 30 ஜூலை (H.S.) தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தே
Plus 2 original mark sheets to be distributed starting today.


சென்னை, 30 ஜூலை (H.S.)

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போது அசல் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்குகிறது.

இதன்படி, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற மேல்நிலைப் பள்ளிகளிலேயே தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட அனைத்து மாணவர்களுக்கும் இன்றே சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் தங்களது சான்றிதழ்களைப் பெற முடியும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பள்ளிக்குச் செல்லும்போது உங்களது தேர்வு அடையாள அட்டை அல்லது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.

மதிப்பெண் சான்றிதழைப் பெற்றவுடன், அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் மதிப்பெண்கள் சரியாகப் பதிவாகியுள்ளனவா என்பதை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b