மனைவியையும் மாமியாரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண்
ராமநாதபுரம், 30 ஜூலை (ஹி.ச.) ராமநாதபுரம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. அவரது மாமியாரும் வெளிநாட்டில் அரசு ஆசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த
Murder


ராமநாதபுரம், 30 ஜூலை (ஹி.ச.)

ராமநாதபுரம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. அவரது மாமியாரும் வெளிநாட்டில் அரசு ஆசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த செல்லமுத்துவிற்கும் அவரது மனைவி சர்மிளாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை செல்லமுத்துவிற்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிப்போய் கோபம் அடைந்த செல்லமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி சர்மிளாவையும், மாமியார் பத்மாவதி யையும் சரமாரியாக வெட்டிவிட்ட செய்துவிட்டு நேரடியாக கேணிக்கரை காவல் நிலையத்தில் அரிவாளுடன் சென்று சரணடைந்துள்ளார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான போலிசார் நேரில் வந்து ஆய்வு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN