த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் வழக்கு - திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை
சென்னை, 30 ஜூலை (ஹி.ச.) த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் தொடர்பான வழக்கில், நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி காலை, மாலை என இருவேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று இதுவரை கா
செந்தில் பாலாஜி


சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)

த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் தொடர்பான வழக்கில், நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி காலை, மாலை என இருவேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.

அவர் ஆஜராகாதது குறித்து காவல் நிலையத்திற்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய செந்தில் பாலாஜி தரப்பினர் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இதுகுறித்து அவரது தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை.

மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று கையொப்பமிட்டு திரும்பியுள்ளார்.

செந்தில் பாலாஜி ஏன் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை, அவரது உடல்நிலை என்ன என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam