Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்றத்தில், டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், எதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது? அதே நிலையில் எதனடிப்படையில் முன்ஜாமீன் கோருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
விசாரணையின்போது, காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது பெரும் பனிப்பாறையின் நுனி போன்றது மட்டுமே. பல நூறு கோடி ரூபாய் அளவிலான முறைகேடு நடைபெற்றதற்கான உரிய ஆதாரங்கள் உள்ளன. மேலும், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று வாதிடப்பட்டது. அதேசமயம், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசமும் காவல்துறை கோரியது.
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பு,
கூறப்படும் முறைகேட்டில் டாஸ்மாக் நிறுவனத்திற்கோ அல்லது செந்தில் பாலாஜிக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி வருகிறோம் என்று வாதிட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P