சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை - 15 விமானங்களின் சேவை கடும் பாதிப்பு!
சென்னை, 30 ஜூலை (ஹி.ச) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர்,
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை - 15 விமானங்களின் சேவை கடும் பாதிப்பு!


சென்னை, 30 ஜூலை (ஹி.ச)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பெய்த கனமழை காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

இதனால், குளிர்ச்சியான சீதோஷன நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இருப்பினும், இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு முழுவதும் விடாமல் பெய்த மழையால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் விமானங்களை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சுமார் 15 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி, டெல்லி, குவகாத்தி, கோவை, திருச்சி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக உடனடியாக தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்தன. பின்னர் வானிலை சற்று சீரான பிறகே அவை பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

அதேபோல், சென்னையில் இருந்து அபுதாபி, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் குறித்த நேரத்தில் புறப்பட முடியாமல் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Hindusthan Samachar / vidya.b