Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஜூலை (ஹி.ச.)
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ நாகசாயி மந்திர் (ஸ்ரீ சாயிபாபா திருக்கோவில்) வளாகத்தில், 'குரு பூர்ணிமா திருவிழா 2026'
நடைபெற்றது.
ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில் விழா குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்த புனிதமான குரு பூர்ணிமா நாளில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் முறைப்படி நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதில் கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகக்
கலந்து கொண்டனர்.விழா ஏற்பாட்டாளர்கள் & அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் சர்வோத்தமன்,செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சுகுமார்,தியாகராஜன், சந்திரசேகர், அமர்நாத் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் 5000 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J