தஞ்சாவூர் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - 11 பேர் காயம்
தஞ்சாவூர், 30 ஜூலை (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள லெட்சுமிபுரம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். வீட்டில் திடீரென தீப்பிடித்ததை அணைக்க முயன்றபோது, அங்கு இ
தீ


தஞ்சாவூர், 30 ஜூலை (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள லெட்சுமிபுரம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.

வீட்டில் திடீரென தீப்பிடித்ததை அணைக்க முயன்றபோது, அங்கு இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், லேசான காயமடைந்த 4 பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரபாதம் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam