பெரியார் திடலில் காவல்துறை குவிப்பு ஏன்? – தமிழக அரசுக்கு திருமுருகன் காந்தி கேள்வி
சென்னை, 30 ஜூலை (ஹி.ச.) பெரியார் திடலில் காவல்துறை குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தமிழக அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், நீட் தேர்வுக்
Thiru


Nb


சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)

பெரியார் திடலில் காவல்துறை குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தமிழக அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

நீட் தேர்வுக்கு எதிர்ப்புதான் முதலமைச்சர் விஜயின் கொள்கை என்றால், நீட் எதிர்ப்பு பரப்புரையை நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி ஏன் மறுக்கப்பட்டது? பெரியார் திடலுக்குள் காவல்துறையை அனுப்ப வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், யாரை திருப்திப்படுத்துவதற்காக முதலமைச்சர் விஜய் தனது கொள்கைத் தலைவரின் திடலுக்குள் காவல்துறையை குவிக்கிறார்? தமிழ்நாட்டில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியா அல்லது ஆர்.எஸ்.எஸ்.-க்கு அடிபணியும் ஆட்சியா? என்றும் விமர்சித்துள்ளார்.

அத்துடன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற இரண்டு மாதங்களுக்குள், பெரியார் திடலுக்குள் காவல்துறையை அனுப்புவது கொள்கைக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, பெரியார் திடல் என்பது தந்தை பெரியாரின் அரசியல் தலைமையகம். அங்கு காவல்துறையை அனுப்பி அடக்குமுறையை மேற்கொள்வதை மே 17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குள் காவல்துறையை அனுப்ப பா.ஜ.க. துணியுமா? அதுபோல், கொள்கைத் தலைவராக பெரியாரை அறிவித்துவிட்டு, அவரது திடலில் காவல்துறையை குவிப்பது ஏன் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என திருமுருகன் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ