தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சென்னை, 30 ஜூலை (ஹி.ச) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) 2026–27 கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (B.V.Sc & A.H.) மற்றும் B.Tech பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று
Jn


சென்னை, 30 ஜூலை (ஹி.ச)

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) 2026–27 கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (B.V.Sc & A.H.) மற்றும் B.Tech பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (30.07.2026) வெளியிடப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி செ. கமலி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். நிகழ்வில் அரசு செயலர் அனு ஜார்ஜ், இ.ஆ.ப., பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் இர. நரேந்திரபாபு, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ச.மு.க. கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், B.V.Sc & A.H. மற்றும் B.Tech படிப்புகளில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டன.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு

(Online Counselling) தொடர்பான விவரங்கள் விரைவில் அதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

தரவரிசைப் பட்டியல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 31.07.2026 முதல் 02.08.2026 வரை 044-29997349, 044-29997348 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது admission@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.

Hindusthan Samachar / P YUVARAJ