த.வெ.க. அரசின் அலட்சியத்தால் 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் பறிபோனது என திமுக தொழில்நுட்ப அணி குற்றச்சாட்டு
சென்னை, 30 ஜூலை (ஹி.ச) தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள், த.வெ.க. அரசின் அலட்சியத்தால் பறிபோயுள்ளதாக திமுக தொழில்நுட்ப அணி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அணி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெ
Arivalayam


Hh


சென்னை, 30 ஜூலை (ஹி.ச)

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்கள், த.வெ.க. அரசின் அலட்சியத்தால் பறிபோயுள்ளதாக திமுக தொழில்நுட்ப அணி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அணி தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில்,

தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ரீல்ஸ் தயாரிப்பது மற்றும் விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்துவதை விடுத்து, ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜயை திமுக தொழில்நுட்ப அணி வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசின் கவனக்குறைவால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் பறிபோயுள்ளதாகவும், இதுபோன்ற அலட்சியத்தால் மாநிலத்தின் மற்ற உரிமைகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கல்வி மற்றும் மருத்துவத் துறை சார்ந்த உரிமைகளை பாதுகாப்பதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், நிர்வாக செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் திமுக தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ