Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் போதிய நீர் இல்லாத நிலை குறித்து தமிழக அரசை விமர்சித்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
ஆடிப்பெருக்கு விழா நெருங்கிவிட்ட நிலையில், காவிரியில் கால் நனைக்கக்கூட தண்ணீர் இல்லை. தமிழர்களின் முக்கியமான பண்பாட்டு விழாவை கொண்டாடக்கூடிய சூழல் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்திருந்தால், ஆடிப்பெருக்கு விழாவையாவது தண்ணீருடன் கொண்டாடியிருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள அவர், ஆட்சியின் திறனின்மையால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆடிப்பெருக்கு விழாவுக்கு தொலைக்காட்சியில் திரைப்படங்களை ஒளிபரப்புவது மட்டுமே மக்களுக்கு எஞ்சியிருப்பதாகவும் தனது பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P