Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 30 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் விருதுநகரைச் சேர்ந்த மைசூலான் மகன் கருப்புசாமி (22) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பேசி வந்த நிலையில், சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியை, அந்த இளைஞர் விருதுநகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனிடையே சிறுமியை காணவில்லை என பெற்றோர் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். செல்போன் சிக்னல் மூலம் சிறுமி விருதுநகரில் இருப்பதை கண்டறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர்.
இதுகுறித்து புளியங்குடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.
பின்னர் அவரை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / vidya.b