Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 31 ஜூலை (ஹி.ச.)
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார், மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நானும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் அவரவர் மாநில மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்.
இரு மாநிலங்களின் நிலவரம் குறித்து நாங்கள் தொலைபேசி மூலம் பரஸ்பரம் பேசி வருகிறோம்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி கர்நாடகா வருவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல் சூழல் காரணமாக அவரது வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தற்போது கர்நாடகாவில் நிலைமை பதற்றமாக உள்ளது. இந்த சூழலில் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் வரும்போது கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெறுவது சரியாக இருக்காது.
கர்நாடகாவுக்கு விருந்தினராக வருபவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படக்கூடாது. எனவே, சிறிது காலம் காத்திருக்கலாம்.
அதன்பிறகு இருவரும் நேரில் சந்தித்து பேசி முடிவு எடுக்கலாம்.
தமிழகத்திற்கு ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலில் கலந்துவிட்டது.
காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA