பிறப்பு-இறப்பு பதிவு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மசோதாக்கள் மீது மக்களவையில் இன்று விவாதம்
புதுடெல்லி, 31 ஜூலை (ஹி.ச.) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று மக்களவையில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா 2026 மற்றும் உச்சநீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா 2026 ஆகியவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள
Debate in the Lok Sabha today on bills regarding birth and death registration and Supreme Court judges.


புதுடெல்லி, 31 ஜூலை (ஹி.ச.)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று மக்களவையில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா 2026 மற்றும் உச்சநீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா 2026 ஆகியவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

அதேவேளையில் மாநிலங்களவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா 2026 மீது விவாதம் நடைபெற உள்ளது.

மக்களவையில் 1969-ம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டுவர வகைசெய்யும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா 2026-ஐ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்துகிறார்.

உச்சநீதிமன்ற

(நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா 2026-ஐ பரிசீலனைக்கும், நிறைவேற்றத்திற்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொண்டுவர உள்ளார்.

சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நிலைக்குழுவின் அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அமைச்சர்கள் அவை முன் வைக்க உள்ளனர்.

மேலும் அரசியலமைப்பு

(நூற்றி முப்பதாவது திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2025 மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு (திருத்த) மசோதா 2025 ஆகியவை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்கும் தீர்மானத்தையும் மக்களவை பரிசீலிக்க உள்ளது.

மாநிலங்களவையில் 2006-ம் ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்ய வகைசெய்யும் மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி கொண்டுவர உள்ளார்.

இதுதவிர பல்வேறு துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அமைச்சர்களின் அறிக்கைகளையும் மேலவை பரிசீலிக்க உள்ளது.

இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடுகின்றன.

Hindusthan Samachar / vidya.b