Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)
நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சபரிவர்மன் வழக்கில், கை மற்றும் கால்களைக் கட்டி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளதாக தி.மு.க. தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக,
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டதைக் கூட சாரி மா மாடல் ஆட்சி என்று விமர்சித்த தற்போதைய முதலமைச்சர் விஜய், இப்போது இந்தச் சம்பவம் குறித்து மௌனம் காப்பது ஏன் என்று தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், ஆய்வுகள் மற்றும் நிகழ்வுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், காவல் மரணங்கள் நடைபெறும்போது உள்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ற முறையில் அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், காவல் நிலையங்களில் உயிரிழப்புகள் மீண்டும் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் தி.மு.க. தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ