மின்கட்டண குளறுபடி கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் மின்கட்டண குளறுபடிகள் தொடர்பாக, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
ஸ்டாலின்


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் மின்கட்டண குளறுபடிகள் தொடர்பாக, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத் துறையில் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, தற்போது மின்கட்டணப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் குடும்பங்கள் புகார் அளித்திருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகும் பொதுமக்களின் புகார்களைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மின்கட்டணக் குளறுபடிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் 'ரீடிங்' சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam