Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிமுக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், எக்ஸ் சமூக வலைதளத்தில் விமர்சன கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்,
டிவிகே அரசின் செயல்பாடுகள், குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு போன்ற நிகழ்வுகள், முந்தைய திமுக அரசின் புகைப்பட விளம்பர அரசியலைப் போலவே இருப்பதாகத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமாக இருப்பதால், அதனை ஆய்வு செய்வதை மட்டும் புதிய சாதனையாகக் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு விளம்பர நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை விட, விவசாயிகளின் பிரச்சினைகள், காவிரி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முக்கியமான பிரச்சினைகளில் போதிய முன்னேற்றம் இல்லை என்று பலர் கருதுவதாகவும், மக்கள் நலனுக்கான செயல்பாடுகளே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ