Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 31 ஜூலை (ஹி.ச.)
ஜே. கே. ரௌலிங் (J. K. Rowling) உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் (Harry Potter) நாவல் தொடரை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
இவரது இயற்பெயர் ஜோன் ரவுலிங் (Joanne Rowling) என்பதாகும்.
அவர் தன் 11-ஆம் வயதில் கெர்மியோன் கிராங்கர் என்ற கதாபாத்திரத்தை தான் ஒத்திருப்பதாக கூறினார்.
ஸ்டீவ் எடி என்பவர் ரவுலிங்கிற்கு ஆங்கிலம் கற்பித்தார்.
ரவுலிங் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் முதல்நிலையில் தேர்ச்சி அடைந்தார்.
மற்றொரு புனைப்பெயர் ராபர்ட் கால்பிரைத் (Robert Galbraith) என்ற புனைப்பெயரில் புகழ்பெற்ற குற்றப் புலனாய்வு (Crime Fiction) நாவல்களையும் எழுதியுள்ளார்.
ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காக, வெளியீட்டாளரின் அறிவுரைப்படி தனது பெயரின் முதலெழுத்துக்களைக் கொண்டு ஜே.கே. ரௌலிங் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 'கே' (K) என்பது இவரது பாட்டியின் பெயரான கேத்லினை (Kathleen) குறிக்கிறது.
இவரது அசாத்திய கற்பனைத் திறனால் உருவாக்கப்பட்ட மந்திரவாதி சிறுவன் ஹாரி பாட்டரின் கதைகள், உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல கோடி மக்களைக் கவர்ந்துள்ளன.
உலகையே புரட்டிப்போட்ட ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் 1965ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
1990ஆம் ஆண்டில் ஒருமுறை இவர் மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல இருந்தபோது அவரது ரயில் தாமதமாக வந்தது.
அப்போது மக்கள் மிகுந்த தொடருந்தில் லண்டனை நோக்கி இவர் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் ஹாரிபாட்டர் கதைக்கான எண்ணம் இவருடைய மனதில் உதித்தது.
அப்போது சுழன்ற இவரது கற்பனையில் பிறந்தவன்தான் மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் ஹாரிபாட்டர்.
1995ஆம் ஆண்டு 'ஹாரிபாட்டர் அன்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்' என்ற தனது முதல் நாவலை எழுதி முடித்தார்.
அதை தொடர்ந்து, 'ஹாரிபாட்டர் அன்ட் சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்', 'ஹாரிபாட்டர் அன்ட் தி பிரிசினர் ஆஃப் அஸ்கபன்' அடுத்தடுத்து வெளிவந்தன.
இவரது 7 படைப்புகளும் உலகம் முழுவதும் 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பல பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, 1997-ல் இவருடைய முதல் நாவலான 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலோசபர்ஸ் ஸ்டோன்' (Harry Potter and the Philosopher's Stone) வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மேலும் பிரிட்டிஷ் சில்ரன் புக் விருது, 3 முறை ஸ்மார்டீஸ் பரிசு, ஒயிட்பிரெட் சில்ரன்ஸ் புக் ஆஃப் தி இயர் விருது என பல விருதுகள் குவிந்தன.
இந்த நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 8 திரைப்படங்களும் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தன.
தனி ஒரு தாயாக, கடுமையான வறுமை மற்றும் மனச்சோர்வுடன் போராடிக் கொண்டிருந்த ரௌலிங், தனது எழுத்துத் திறமையால் மட்டுமே உலகின் மிகச் செல்வந்த மற்றும் செல்வாக்குமிக்க எழுத்தாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.
இவர் லுமோஸ் (Lumos) என்ற சர்வதேச குழந்தைகள் தொண்டு நிறுவனத்தை நிறுவி, ஆதரவற்ற குழந்தைகளின் நல்வாழ்விற்காகப் போராடி வருகிறார்.
மேலும், பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கும், ஆராய்ச்சிப் பணிகளுக்கும் கோடிக்கணக்கில் நிதி உதவி வழங்கி வருகிறார்.
Hindusthan Samachar / Durai.J