Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் காவல்துறை நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது வெறும் கூட்டத்தைக் கலைக்கும் நடவடிக்கை அல்ல; நீதி கோரி போராடிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர்,
இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறியாமல் இருந்திருந்தால் அது அவரது நிர்வாகத் தோல்வி என்றும், அறிந்தே இந்த நடவடிக்கை நடைபெற்றிருந்தால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ