கொளத்தூர் தொகுதி EVM சரிபார்ப்பு பணி - 3-வது நாளாக தொடர்கிறது
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு பணி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு அறையில் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மு
வாக்கு


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) சரிபார்ப்பு பணி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு அறையில் இன்று 3-வது நாளாக நடைபெற்றது.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்க அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம், சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள EVM-களை ஆய்வு செய்ய அனுமதி வழங்கியது.

இதையடுத்து, நேற்று முன்தினம் தொடங்கிய சரிபார்ப்பு பணி இன்று 3-வது நாளாக தொடர்ந்தது. காலை நடைபெற்ற ஆய்வில் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் EVM-கள் பரிசோதிக்கப்பட்டன.

இந்தப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மொத்தம் 14 வாக்குச்சாவடிகளின் EVM-கள் சரிபார்க்கப்பட உள்ள நிலையில், தினமும் இரண்டு வாக்குச்சாவடிகளின் எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நடைமுறையின்படி, இன்று மூன்றாவது நாள் சரிபார்ப்பு பணிகளும் நடைபெற்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P