Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனு, திங்கட்கிழமை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, மார்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜாமீன் கோரி மார்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு மார்கண்டேயன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ஜாமீன் மனுவை திங்கட்கிழமை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P