வாசிப்பே தமிழ்நாட்டின் அடையாளத்தைப் பாதுகாக்கும் – முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) புத்தக வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தன்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகள் மற்றும் சால்வைகளுக்குப் பதிலாக புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குமாறு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டதாக முன்னாள் முதலமைச்சர
Bo


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

புத்தக வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தன்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகள் மற்றும் சால்வைகளுக்குப் பதிலாக புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குமாறு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டதாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இதுவரை கிடைத்த சுமார் 6 லட்சம் புத்தகங்கள் பல்வேறு நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5,000 புத்தகங்களை நூலகங்கள் மற்றும் சிறைச்சாலைக்கு வழங்கியுள்ளதாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், தன்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகள் மற்றும் சால்வைகளுக்குப் பதிலாக புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இதுவரை கிடைத்துள்ள சுமார் 6 லட்சம் புத்தகங்கள் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பயன்பெறும் வகையிலும், தாம்பரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட நூலகத்திற்கும் மேலும் 5,000 புத்தகங்களை இன்று வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் படிப்பகங்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தால், அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

வாசிப்புப் பழக்கம் பெருகினால்தான் தமிழ்நாடு தனது தனித்துவ அடையாளத்தை இழக்காமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ