Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 31 ஜூலை (ஹி.ச.)
முட்டம் தனியார் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி படகுகளின் உரிமத்தை உறுதி செய்யக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், முட்டம் தனியார் துறைமுகத்தில் உள்ள பல விசைப்படகுகள் முறையான மீன்பிடி உரிமம் இல்லாமல் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
உரிமம் இல்லாமல் இயங்கும் படகுகளால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடல் வளம் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
எனவே உரிமம் இல்லாமல் கடலுக்குச் செல்லும் படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அனைத்து படகுகளின் உரிமங்களையும் சரிபார்க்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
இது தொடர்பாக மீன்வளத்துறை ஆணையர், துணை ஆணையர் மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் மனு குறித்து மீன்வளத்துறை ஆணையர் பதில் அளிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b