தேவாலா பகுதியில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை - வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன
நீலகிரி, 31 ஜூலை (ஹி.ச.) நீலகிரியில் இன்று கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மற்றும் பனிமூட்டத்துடன் கூடிய காரல் மழையில் செய்து வருகிறது. குறிப்பாக தேவாலா ம
Snowfall


நீலகிரி, 31 ஜூலை (ஹி.ச.)

நீலகிரியில் இன்று கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மற்றும் பனிமூட்டத்துடன் கூடிய காரல் மழையில் செய்து வருகிறது.

குறிப்பாக தேவாலா மற்றும் அதில் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மிதமான மழை மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அதிகாலை நேரத்தில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் பாதிப்படைந்தனர் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் பேருந்துகள், கார் மற்றும் ஆட்டோக்கள் , முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.

தேவாலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வரும் காலநிலையால் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது .

Hindusthan Samachar / ANANDHAN