PM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர் - கணக்குகளை வெளியிட வலியுறுத்தல்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) PM CARES நிதியின் வரவு-செலவு விவரங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பொதுமக
மாணிக்கம்


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

PM CARES நிதியின் வரவு-செலவு விவரங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

பொதுமக்களின் நன்கொடைகள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டதே PM CARES நிதி என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2022–23 நிதியாண்டில் ₹6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் ₹439.38 கோடி மட்டுமே செலவிடப்பட்டு, ₹6,283.68 கோடி கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2022–23-க்கு பிறகு PM CARES நிதியின் தணிக்கை (Audit) அறிக்கைகள் ஏன் வெளியிடப்படவில்லை என்றும், ஒன்றிய அமைச்சர்கள் அறங்காவலர்களாக உள்ள அமைப்புக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) பொருந்தாது எனக் கூறப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அமைச்சர்கள் பொது ஊழியர்கள் என்பதால், PM CARES நிதி RTI சட்டத்தின் வரம்பிற்குள் வர வேண்டும் என்றும், மக்கள் பணத்தின் கணக்குகளை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P