Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 31 ஜூலை (ஹி.ச.)
புதுச்சேரியில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கடற்கரை சாலையில் உள்ள துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், திமுக எம்எல்ஏக்கள் செந்தில் குமார், செந்தில், கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சந்திப்பின் போது,
கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாததால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் ஸ்தம்பித்திருப்பதால் மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் ஆளுநரின் கவனத்திற்கு திமுக உறுப்பினர்கள் கொண்டு சென்றனர்.
மேலும், நிர்வாக நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam