நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) காங்கிரஸ் கட்சியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சிக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவிருக்கிறார். காங்கிரஸில்
Rahul Gandhi


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

காங்கிரஸ் கட்சியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சிக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவிருக்கிறார்.

காங்கிரஸில் மொத்தம் 72 மாவட்டத் தலைவர்கள் பொறுப்பு இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 69 மாவட்டங்களுக்கான தலைவர்களை காங்கிரஸின் அகில இந்திய தலைமை அறிவித்தது. தேர்தல் காரணமாக அப்போது இவர்களுக்கு பயிற்சி கூட்டத்தை நடத்த முடியவில்லை.

அதனால் கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் மகாபலிபுரத்தில் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், லோக்கல் அரசியல் செயல்பாடுகள், கொள்கை சார்ந்த விவகாரங்கள் என பல விஷயங்களும் காங்கிரஸின் சீனியர்களால் மாவட்டத் தலைவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டத்தின் நிறைவாக நாளை (ஆகஸ்ட் 1 ஆம் தேதி) ராகுல் காந்தி மாவட்டத் தலைவர்கள் மத்தியில் உரையாடி ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்

தமிழகம் வரும் ராகுல் காந்தி முதல்வர் விஜய்யை சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மாணிக் தாகூர் எம்பி செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி -விஜய் சந்திப்பு வாய்ப்பு இல்லை இன்று தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது

Hindusthan Samachar / ANANDHAN