செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் - கைது நடவடிக்கைக்கு தற்காலிக தடை
புதுடெல்லி, 31 ஜூலை (ஹி.ச.) டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். அவரை கைது செய்யவும் இடைகலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் செந்தில் பாலாஜிய
செந்தில் பாலாஜி


புதுடெல்லி, 31 ஜூலை (ஹி.ச.)

டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். அவரை கைது செய்யவும் இடைகலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த வழக்கு, தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ ஒருவருக்கு ரூ.35 கோடி பேரம் பேசி, ஆட்சியை நிலையற்றதாக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டதாகும்.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் தன்னை வழக்கில் இணைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி,

செந்தில் பாலாஜி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, விசாரணையில் தலையிடவோ கூடாது என்றும், நீதிமன்றம் விதித்துள்ள பிற நிபந்தனைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam