Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 31 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் சோலையார் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்த நிலையில் வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் தென்மேற்கு பருவமழை குறைவாக உள்ளதால் ஆறுகளில் சற்று வெள்ளப்பெருக்கு குறைவாக செல்கிறது. மேலும் கடந்த ஆண்டு இந்த நாட்களில் சோலையார் அணை மூன்று முறை மதகுகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 89 கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது மேலும் இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு உள்ளிட்ட அணைகள் வறண்டு காணப்படுகிறது.
இதனால் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய கீழ்ப்பகுதியான ஆனைமலை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம், திருப்பூர், ஈரோடு வரை குடிநீர் ஆதாரமாக இந்த அணையின் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு மழை பொழிவு குறைவு என்பதால் வரும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் வால்பாறை பகுதியை மட்டும் அல்ல கீழ்ப்பகுதிகளும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் ஆனைமலை பகுதியில் டெல்டா விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் இன்றி வறண்ட வானிலையை காணப்பட உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN