Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 31 ஜூலை (ஹி.ச.)
'வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். ராஜா தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
தமிழ்நாட்டில் திமுகவினர் இளைஞர்களிடம் பிரிவினை எண்ணங்களை விதைத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், வந்தே மாதரம் பாடலில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வரிகள் உள்ளன என்ற டி.கே.எஸ். ராஜாவின் கருத்துக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 'வந்தே மாதரம்' பாடலின் தமிழாக்கத்தை தனது பதிவில் வெளியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், அதில் தாய்நாட்டை போற்றும் வரிகளே இடம்பெற்றுள்ளன என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்த வரிகளும் இல்லை என்றும் வாதிட்டுள்ளார்.
மேலும், வந்தே மாதரம் பாடலின் பொருளை முழுமையாக படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அதுகுறித்து தவறான கருத்துகளை பரப்பக் கூடாது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P