கூடலூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், அக்கட்சியில் இருந்து விலகல்
நீலகிரி, 04 ஜூலை (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன் அதிமுகவில் இருந்து விலகினார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு
Pon Jayaseelan


நீலகிரி, 04 ஜூலை (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன் அதிமுகவில் இருந்து விலகினார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில்,

மரியாதைக்குரிய அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு வணக்கம். 2006- கடந்த அஇஅதிமு ஆண்டு கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு கழகப்பணியாற்றி வந்தேன், அண்ணா தொழிற்சங்க பேரவையின் தோட்டத் தொழிலாளர் பிரிவு செயலாளராக தற்பொழுது பொறுப்பில் உள்ளேன்.

கடந்த 2021-26 வரையிலான கால கட்டத்தில் கூடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்றேன், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வந்தேன்.

மீண்டும் 2026-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தேன், மேற்கண்ட வாய்ப்புகளை உருவாக்கித் தந்த தங்களுக்கும், அஇஅதிமுக கழகத்திற்க்கும் என் இதய பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அஇஅதிமுக கழகத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாத சூழலில் அடிப்படை உறுப்பினர் மற்றும் கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் தோட்டத் தொழிலாளர் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்கின்றேன் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நல்கிய கட்சியின் அனைத்து இதுவரை எனக்கு ஒத்துழைப்பு பொறுப்பாளர்களுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும் எனது நன்றிகளை தங்கள் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN