முதல்வர் குறித்து அவதூறு பேச்சு - அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்
திருச்செந்தூர், 04 ஜூலை (ஹி.ச.) முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜயை ஒருமையிலும், ஒரு நடிகையுடன் தொடர்புபடு
அனிதா


திருச்செந்தூர், 04 ஜூலை (ஹி.ச.)

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜயை ஒருமையிலும், ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தியும் பேசியிருந்தார்.

இதையடுத்து, முதல்வர் குறித்து அவதூறாக அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பதாக மீது தவெக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் கோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனுவை நேற்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்தசூழலில் தான், நேற்று ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது காவல்துறை.

தொடர்ந்து, சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞரும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாதிட்டனர்.

அதன் பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி நீதிபதி சிதம்பரம் உத்தரவிட்டார்.

மேலும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஆத்தூர் காவல் நிலையத்தில் பத்து நாட்கள் கையிழுத்திட வேண்டும் என்றும், நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P