சோளங்குருணி கிராம மக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் - சி.டி.ஆர். நிர்மல் குமார்
மதுரை, 04 ஜூலை (ஹி.ச.) சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது தொடர்பாக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில், 21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்
CTR Nirmal Kumar


மதுரை, 04 ஜூலை (ஹி.ச.)

சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது தொடர்பாக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில்,

21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.

இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN