Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தற்போது வால்பாறை, சிரபுஞ்சி, சின்னக்கல்லார் மற்றும் அக்காமலை கீரஸ் ஹில்ஸ் பகுதியில் கன மழை பெய்து வரும் நிலையில் ஆறுகளில் கரை புரண்டு ஓடும் தண்ணீரில் யாரும் குளிக்கவோ கால்நடைகளை மேய்க்கவோ கரையை கடக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆட்சியர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வால்பாறைக்கு வந்த சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, கேரளா மலப்புரம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆற்றில் குளிக்காமல் செல்கின்றனர்.
இதனால் காவல்துறை யாரும் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதால் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN